கடைசிவர அத பண்ண முடியாது; எனக்கு அந்த விருப்பமும் இல்ல - விராட் கோலி ஓபன் டாக்!
தனது ஒய்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விராட் கோலி. இவர் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.
மேலும், தற்போது விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது, வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் தனது ஒய்வு குறித்து பேசிய அவர் "ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று இருக்கும்.
வருத்தப்படக்கூடாது
இறுதிவரை என்னால் விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தில் நடந்தவற்றைப் பற்றி சிந்தித்து கொண்டிருக்கவும் எனக்கு விருப்பமில்லை.
என் கிரிக்கெட் வாழ்வில் இதனை செய்திருக்கலாம் என்று பின்னாட்களில் வருத்தப்படக்கூடாது. நான் செய்ய நினைப்பவற்றையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும். ஓய்வை அறிவித்துவிட்டால் சில நாட்களுக்கு நீங்கள் என்னை பார்க்கவே முடியாது" என்று தெரிவித்துள்ளார்.