அயோத்தி ராமர் கோயில்: விராட் கோலி முதல் அம்பானி வரை - 7000 விஐபிக்கள் அழைப்பு!

Uttar Pradesh India
By Jiyath Dec 07, 2023 11:06 AM GMT
Report

ராமர் கோயில்

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு இதற்கான கட்டுமான பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அயோத்தி ராமர் கோயில்: விராட் கோலி முதல் அம்பானி வரை - 7000 விஐபிக்கள் அழைப்பு! | Ayodhya Ramar Idol Special Invitees Utter Pradesh

தொடர்ந்து மும்முரமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2024 ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிவுக்கு வரும் வகையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

அழைப்பிதழ்

மேலும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், தொழிலதிபர்கள்‌ முகேஷ்‌ அம்பானி, கெளதம்‌ அதானி, ரத்தன்‌ டாடா, கிரிக்கெட்‌ வீரர்கள்‌ சச்சின்‌. டெண்டுல்கர்‌, விராட்‌ கோலி, நடிகர்கள்‌ அமிதாப்‌ பச்சன்‌, அக்ஷய்‌ குமார்‌, கங்கனா ரணாவத்‌ உள்ளிட்ட 3,000 முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ்‌ வழங்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்: விராட் கோலி முதல் அம்பானி வரை - 7000 விஐபிக்கள் அழைப்பு! | Ayodhya Ramar Idol Special Invitees Utter Pradesh

மேலும்‌, நாடு முழுவதும்‌ உள்ள மதத்‌ தலைவர்கள்‌, முன்னாள்‌ பாதுகாப்புப்‌ படை வீரர்கள்‌, முன்னாள்‌. ஐஏஎஸ்‌, ஐபிஎஸ்‌ அதிகாரிகள்‌; கவிஞர்கள்‌, இசைக்‌ கலைஞர்கள்‌, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண்‌ விருதாளர்கள்‌, ஹிந்து அமைப்பின்‌ நிர்வாகிகள்‌ என மொத்தம்‌ 4000 பேருக்கு நிகழ்ச்சியில்‌ பங்கேற்க அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.