முதல் போட்டியிலேயே தோற்றால் அவ்வளவுதான் - விராட் கோலி சொன்னதை பாருங்க!
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து விராட் கோலி வெளிப்படையாக பேசியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்காக 2009, 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடியுள்ளார். 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் ஒரு வீரராக வென்றார். 2017 தொடரில் பாகிஸ்தானிடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறுகிறது. ஒரு தொடராக இது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நாம் ஒரே மாதிரி சிறப்பாக விளையாடினால் மட்டுமே ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் டாப் எட்டு இடத்தை பிடிக்க முடியும்.
கோலி ஓபன்டாக்
அதன் மூலம் இந்த தொடருக்கு நாம் தகுதி பெற முடியும். இந்த தொடரில் எப்போதுமே கடும் சவால்களும் போட்டியும் நிறைந்திருக்கும். ஒரு டி20 உலக கோப்பையில் எவ்வளவு நெருக்கடி ஏற்படுமோ அதை போல் ஒரு நாள் போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இருக்கும்.
நாம் மூன்று லீக் போட்டிகளில் விளையாடுவோம். இதில் முதல் போட்டியில் தோல்வியை தழுவினால் கடும் அழுத்தத்திற்கு நீங்கள் ஆளாகி விடுவீர்கள்.
எனவே முதல் போட்டியிலிருந்து அழுத்தம் நிறைந்து இருப்பதால், இந்த தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனால் நீங்கள் முதல் போட்டிகளில் இருந்து உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tomato Chutney: தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பாருங்க Manithan

நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள் IBC Tamil
