விளம்பரத்தில் மட்டும் விராட் கோஹ்லி சம்பாதித்தது இத்தனை கோடியா?
விளம்பர வருவாய் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்திய பிரபலங்களில் அவர் மதிப்பு மிக்கவராக இருக்கிறார். இதனால் விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.
30-க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விளம்பர வருமானம் மூலம் விராட் கோஹ்லி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி 2 இடங்கள் பின்தங்கி உள்ளார். அவர் விளம்பரங்கள் மூலம் ரூ.262 கோடி சம்பாதித்துள்ளார்.
அமீர்கான், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட டோனி முன்னிலையில் உள்ளார்.
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து IBC Tamil
தேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி.. IBC Tamil
மகிந்தவின் குடும்பத்திற்கு நேர்ந்த கதி: சற்றுமுன்னர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலை IBC Tamil