ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதற்கு விராட் காரணமா? அப்படி என்ன செய்தார்?
வரும் 2028-ஆம் ஆண்டின் ஒலிம்பிக்கில் போட்டியில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்
உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக ஒலிம்பிக் போட்டிகள் கருதப்படுகின்றன. அதே போல ஆசிய நாடுகளில் பெரிய விளையாட்டாக பார்க்கப்படுவது கிரிக்கெட் தான். இந்நிலையில், கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கவேண்டும் என நீண்ட நாட்களாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதனை ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்று கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் அளித்துள்ளது.
காரணம் விராட் தான்
வரும் 2028-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தொடரில் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. கடந்த 1900 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் இடம்பெறாமல் இருந்து வருகிறது.
இது குறித்த அறிவிப்பை ஒலிம்பிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அன்டன் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
??Virat Kohli is the only reason Cricket is included in Olympics ❤️#ViratKohli | #olympics2028#Olympics #KatrinaKaif#AUSvSL #ENGvAFG #BiggBoss17#MunawarFaruqui #INDvsPAKpic.twitter.com/puzs5iWQdF
— SportsPundit (@_SportsPundit) October 16, 2023
இது குறித்து பேசும் போது, நிக்கோலோ காம்ப்ரியானி கிரிக்கெட்டின் உலகளாவிய அணுகல் மற்றும் இந்தியாவின் விராட் கோலி போன்ற வீரர்களின் அபரிமிதமான புகழ் ஆகியவை IOC யின் முடிவை பாதித்த முக்கிய காரணிகளாகும் என தெரிவித்தார்.