விராட் கோலியின் ஜெர்ஸியை பாபர் அசாம் வாங்கியது தவறு - முன்னாள் வீரர் கண்டனம்!

Virat Kohli Cricket Pakistan Babar Azam
By Jiyath Oct 16, 2023 06:33 AM GMT
Report

கோலியிடம் இருந்து பாபர் அசாம் ஜெர்ஸியை வாங்கியது தவறு என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விராட் கோலியின் ஜெர்ஸியை பாபர் அசாம் வாங்கியது தவறு - முன்னாள் வீரர் கண்டனம்! | It Is Wrong Babar Azam Get Jersey From Kohli

போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, ஆட்டோகிராப் போட்ட தனது ஜெர்சியை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமிற்கு பரிசாக கொடுத்தார். இதை பலரும் ரசித்தும், பாராட்டியும் வந்தனர். இந்நிலையில் இந்த செயலில் பாபர் அசாம் நடந்து கொண்ட விதம் சரியில்லை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

IND vs PAK: மைதானத்தில் பிரபல அமெரிக்க யூடியூபரிடம் அந்த வார்த்தையை முழங்க சொன்ன சிறுவர்கள்!

IND vs PAK: மைதானத்தில் பிரபல அமெரிக்க யூடியூபரிடம் அந்த வார்த்தையை முழங்க சொன்ன சிறுவர்கள்!

வாசிம் அக்ரம் கண்டனம்

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறுகையில் "மோசமான செயல்பாட்டால் ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில், மைதானத்தில் எல்லோர் முன்னிலையிலும் கோலியிடம் இருந்து பாபர் அசாம் ஜெர்சியை வாங்கியது தவறு. இதை செய்வதற்குரிய நாள் இதுவல்ல.

விராட் கோலியின் ஜெர்ஸியை பாபர் அசாம் வாங்கியது தவறு - முன்னாள் வீரர் கண்டனம்! | It Is Wrong Babar Azam Get Jersey From Kohli

உங்களது மாமா மகன் கோலியிடம் இருந்து 'டி ஷர்ட்' வாங்கிவரும்படி கேட்டிருந்தால், ஆட்டம் முடிந்த பிறகு வீரர்களின் ஓய்வறைக்கு சென்று பெற்றிருக்க வேண்டும். உங்களது தனிப்பட்ட விஷயத்தை வெளிப்படையாக செய்திருக்கக் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.