IND vs PAK: மைதானத்தில் பிரபல அமெரிக்க யூடியூபரிடம் அந்த வார்த்தையை முழங்க சொன்ன சிறுவர்கள்!
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் போது அமெரிக்க யூடியூபரிடம் சிறுவர்கள் கணபதி பாப்பா என முழங்க சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் ஸ்ரீராம் சர்ச்சை
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் மோதின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பும்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் டிஜே 'ஜெய்ஸ்ரீராம்' என்ற பாடலை போட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி விவாதப் பொருளானது.
புது சர்ச்சை
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் தற்போது என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இதேபோல மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. பிரபல அமெரிக்க யூடியூபரான 'ஸ்பீட்' என்று அறியப்படும் 'டேரன் ஜேசன் வாட்கின்ஸ்' என்பவர் மைதானத்திற்கு ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார்.
அவரிடம் அருகிலிருந்த சிறுவர்கள் 'கணபதி பாப்பா' என கூற சொல்லியுள்ளனர். இதனை கேட்ட அவர் நோ என்று மறுத்துள்ளார். அதற்கு சிறுவர்கள் கடவுளின் பெயரை சொல்வதில் தவறில்லை என்றனர். அதற்கு ஸ்பீட் விளக்கம் கேட்க, நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம் என அந்த சிறுவர்கள் சொல்கின்றனர். இந்த வீடியோ இப்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
This is how Hindutva breeding happens among the northern kids..
— We Dravidians (@WeDravidians) October 15, 2023
They are being prepared for future riots & hatred! pic.twitter.com/fslUJCqKuL