இது தான் விஷயமா!!சூர்யகுமார் யாதவை வேணும்'னே ரன் அவுட்டாக்கினாரா விராட்??

Virat Kohli Indian Cricket Team Suryakumar Yadav
By Karthick Oct 23, 2023 05:02 AM GMT
Report

 நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவின் ரன் அவுட்டிற்கு பலரும் விராட் கோலியை குறை கூறி வரும் நிலையில், அது குறித்த ரசிகரின் பதிவு வைரலாகி வருகின்றது.

சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி நேற்று 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 273 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், விராட் கோலி 95 ரன்களை விளாச இந்திய அணி 12 பந்துகளை மிச்சம் வைத்து வெற்றி பெற்றது. 

virat-is-not-the-reason-for-sky-run-out-fan-says

இப்போட்டியில் நேற்று மிகவும் சர்ச்சையானது சூர்யகுமார் யாதவின் ரன் அவுட். ஆட்டத்தின் 33.5 பந்தில் கவர் திசையில் பந்தை தட்டி விட்ட சூரியகுமார் யாதவ் ஒரு ரன் எடுக்க முயன்று ஆடுகளத்தின் பாதி வரை ஓடிவந்த போது, விராட் கோலி அவரை திரும்ப செல்லுமாறு கூறினார்.

ரோஹித்தெல்லாம் இந்திய அணிக்கு கேப்டனா? கேட்டவர்களுக்கு பதிலடி - பாராட்டிய ஆஸி. வீரர்!

ரோஹித்தெல்லாம் இந்திய அணிக்கு கேப்டனா? கேட்டவர்களுக்கு பதிலடி - பாராட்டிய ஆஸி. வீரர்!

இதற்குள் நியூசிலாந்து அணியின் சான்ட்னர் ஃபீல்டிங்கில் ரன் அவுட் செய்யப்பட்டார் சூரியகுமார் யாதவ் . இதனை வைத்து பலரும் விராட் கோலியின் தவறு தான் இது என விமர்சனம் செய்து வருகின்றார். இந்நிலையில், எதன் காரணமாக இந்த ரன் அவுட் நிகழ்ந்தது என்ற கருத்தை ரசிகர் ஒருவர் தெளிவாக பதிவிட்டுள்ளார். 

வைரலாகும் கருத்து

அதில், விராட் கோலியின் தவறால் சூரியகுமார் யாதவ் ரன் அவுட்டாகவில்லை. அவுட்டாவதற்கு இரண்டு பந்துகளுக்கு முன்பாக ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்து விட்டு விராட் கோலி ஒரு ரன் எடுக்க முயன்றார். அப்போது சூர்யகுமார் யாதவ் பந்து பீல்டரின் கைகளில் இருக்கிறது என்பதால் ரன் எடுக்கும் வாய்ப்பை மறுத்து விட்டார்.

இது குறித்து விராட் கோலி ஒரு ரன் எடுத்திருக்கலாம் என சூரியகுமார் யாதவிடம் பேசினார். இதே போல தான் ஃபீல்டரின் கைகளில் பந்தை அடித்துவிட்டு சூர்யகுமார் யாதவ் ஒரு ரன் எடுக்க முயற்சித்த நிலையில், பந்து ஃபில்டரை கடந்து செல்கிறதா என்பதை பார்த்து தான் விராட் ரன் எடுக்கும் வாய்ப்பை மறுத்தார். இதனால் சூரியகுமார் யாதவ் ரன் அவுட் ஆனார். இதில் விராட்டின் தவறு எதுவுமில்லை என பதிவு செய்திருக்கிறார்.