போலீசை பட்டாக் கத்தியால் தாக்க முயன்ற நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல்

Viral Video Tamil Nadu Police
By Nandhini Jun 18, 2022 09:53 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ

அந்த வீடியோவில், ஒரு போலீஸ் ஜீப் ஒன்று வந்து கடை முன்பு நிற்கிறது. ஜீப்பிலிருந்து ஒரு போலீஸ் இறங்கி வருகிறார். போலீஸ் வருவதைப் பார்த்த ஒரு நபர் தப்பிக்க முயற்சி செய்கிறார். 

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த நீண்ட பட்டாக் கத்தியை எடுத்து போலீசை தாக்க முயற்சி செய்கிறார். அவரிடம் சுதாரித்துக் கொண்ட போலீஸ் அவரிடம் சண்டையிட்டு, அந்த நபரை கீழே தள்ளி லாவகமாக அவரிடமிருந்து கத்தியை பிடுங்குகிறார். 

கத்தியை அவரிடமிருந்து பிடுங்கி அந்த நபரை ஜீப்பில் ஏற்றுகிறார். 

தற்போது, இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், போலீசாரின் அந்த துணிச்சலை வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

போலீசை பட்டாக் கத்தியால் தாக்க முயன்ற நபர் - பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ வைரல் | Viral Video Tamil Nadu Police

இதோ அந்த வீடியோ  -