மலைப்பாம்பை உயிருடன் கடித்துக் கொன்ற எறும்புகள்- நடுங்கவைக்கும் வீடியோ!
மலைப்பாம்பு ஒன்றை சின்னஞ்சிறு எறும்புகள் கூட்டம் கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலைப்பாம்பு
பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். அவ்வப்போது சமுக வலைத்தளங்களில் வினோதமான புகைப்படங்களும், வீடியோக்களும் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வன வாழ்க்கை குறித்த அரிய தகவல்களையும் விலங்குகள் வீடியோக்கள் குறிப்பாக நாய் , குரங்கு , பாம்பு உள்ளிட்ட வீடியோக்கள் மீது இணைய வாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் இருந்து வருகின்றது.
அதிலும் மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிக முக்கிய இடம் உள்ளது. பொதுவாகப் பாம்புகள் மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்படுகின்றன. அதிலும் மலைப்பாம்பு உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது .
வீடியோ
அப்படி பாம்புகளின் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மலைப்பாம்பு ஒன்றை சின்னஞ்சிறு எறும்புகள் கடிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் நீரோடையில் செல்லும் மலைப்பாம்பு ஒன்று எறும்புகள் கூட்டத்தில் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து வெளியே வர முடியாமல் மிகவும் அந்த பாம்பு சிரமப்படுகிறது.
இந்த வீடியோவிற்கு பலரும் எந்த உயிரினத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது . உருவத்தை காட்டிலும் ஒன்றை விட வலிமையானதாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.