மரங்களில் பழங்களுக்கு பதில் கொத்து கொத்தாக தொங்கும் பாம்புகள் - நடுங்கவைக்கும் தோட்டம்..!
வியட்நாம் நாட்டில் உள்ள பாம்புகளின் தோட்டம் குறித்தான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்புகள் நிறைந்த தோட்டம்
வியாட்நாம் தோட்டத்தில் ஒரு பெரிய தோட்டம் ஒன்று காணப்படுகிறது. இங்கு பழங்களோ, காய்கறிகளோ இந்த தோட்டத்தில் கிடைப்பதில்லை. இந்த தோட்டத்தில் உள்ள மரங்களில் ஏராளமான பாம்புகள் மரக்கிளைகளில் தொங்கிய படி காட்சியளிக்கின்றது. இங்கு பாம்புகள் தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது.
வியட்நாமின் Trại ran Dong Tam என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற தோட்டங்களில் பழங்கள், காய்கறிகள் விளைவிப்பது போன்று இங்கு பாம்புகள் வளர்கப்படுகின்றன.
சுற்றுலா தலமாக மாறியது
அத்துடன் இந்த பண்ணையில் மருத்துவ பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த தோட்டத்தில் 400க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்புகளின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இதனுடன் இந்த டோங் டாம் பாம்பு தோட்டத்திற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
12 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் பல வகையான வசதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 பேர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற இந்த தோட்டத்திற்கு வருகை தருகின்றனர். விஷ பாம்புகள் நிறைந்த இந்த தோட்டம் தற்போது சுற்றுலா தளமாக மாறியுள்ளது.