24 கேரட் தங்கத்தில் பிரம்மாண்ட வீடு - எங்குள்ளது, யாருடையது தெரியுமா?
24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று கவனம் பெற்றுள்ளது.
24 கேரட் தங்கம்
பெங்களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரியம் சரஸ்வத். இவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்து, புதுமையான வீடுகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் மத்திய பிரதேசம், இந்தூரில் 24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.
பிரம்மாண்ட வீடு
அதில் மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன. வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகளும், சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில், “எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டிடங்களை கட்டி கொடுத்தோம்.
தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலை கட்டி வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.