தங்கம் விலை இனி சரியும்; முன்கூட்டியே தீபாவளிதான் - அடிச்சு சொன்ன ஆனந்த் சீனிவாசன்
தங்கம் விலை குறைவு தொடருமான என ஆனந்த் சீனிவாசன் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தங்கம் விலை
இன்று சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.72,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9,070க்கு விற்பனையாகிறது.

இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,
ஆனந்த் சீனிவாசன் தகவல்
"டிரம்ப் இந்தாண்டு தீபாவளியை முன்கூட்டியே கொண்டு வந்துவிட்டார். இதனால் நாம் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். டிரம்ப் செய்த காரியத்தால் பங்குச்சந்தை ஏற்கனவே உயர ஆரம்பித்துவிட்டது. டிரம்பால் அமெரிக்கா மட்டுமின்றி, உலகளவில் பங்குச்சந்தை ஏறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. டாலர் மதிப்பும் உயர்ந்துவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் சரிய ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலையும் கொஞ்சம் குறைகிறது. இதனால் டாலர் மதிப்பும் அதிகரித்தது. ஆனால், ஜூலை மாதமே வட்டி விகிதம் குறைக்கலாம் என அமெரிக்க பெடரல் ரிசர்வ் சொன்னதால் டாலர் மதிப்பு ரொம்ப அதிகரிக்கவில்லை.
இந்த சூழலில் தங்கம் விலை இன்னும் குறைய வாய்ப்பு இருக்கிறது. ரூ.200- 300 வரை கூட குறையலாம். கச்சா எண்ணெய் விலையும் குறையும். இது இந்தியாவுக்கு நல்ல செய்தி" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil
அகற்றப்பட்ட கருணாநிதி- மு.க.ஸ்டாலின் -உதயநிதி புகைப்படங்கள்! புதிய அரசுக்கான அதிரடி ஏற்பாடுகள் IBC Tamil