கோவில் நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் - வெளுத்து வாங்கிய பக்தர்கள் - வைரல் வீடியோ

Viral Video
5 நாட்கள் முன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் சரயு நதி உள்ளது. இந்த நதி கங்கையின் ஏழு துணை நதிகளில் ஒன்றாக இருக்கிறது.

ராமர் பிறந்த அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்துள்ளதால், இந்துக்களால் இது புனிதமான நதியாக வணங்கப்பட்டு வருகிறது. இந்த நதியில் குளித்து விட்டு தான் கோயிலுக்குள் பக்தர்கள் செல்வார்கள்.

கோவில் நதியில் மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் - வெளுத்து வாங்கிய பக்தர்கள் - வைரல் வீடியோ | Viral Video Husband Wife Kiss

வைரல் வீடியோ

இந்நிலையில், சரயு நதிக்கரையில் கணவன் – மனைவி தம்பதியினர் குளித்து கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி பக்தர்களும் நதியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நதியில் கணவன், மனைவி மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். கணவன் ஆசையாக தனது மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதை குளித்து கொண்டிருந்த பக்தர்கள் பார்த்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் செயல்களை சகிக்க முடியாத பக்தர்கள் கணவரை தண்ணீரிலிருந்து இழுத்து சென்று தர்ம அடி கொடுத்து வெளுத்து வாங்கினர்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் தங்களுடைய கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.   
இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.