திருடனிமிருந்து பெண்ணை காப்பாற்றிய நாய் - வைரலாகும் வீடியோ - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
சமூகவலைத்தளங்களில் ஒரு சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
பெண்ணை காப்பாற்றிய நாய்
அந்த வீடியோவில், ஒரு பெண் சாலையில் யாரும் நடமாட்டம் இல்லாத தெருவில் தன்னுடைய பொருட்கள் அடங்கிய கவரை கையில் பிடித்துக் கொண்டவாறு சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது, அந்த பெண் பின்னால் ஒருவர் நடந்து வந்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த நாய்... இவர்கள் வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறது. அப்போது, திடீரென்று பின்னால் நடந்து வந்த நபர் அப்பெண்ணை தாக்கி கையில் இருக்கும் பொருட்களை பிடுங்கி இழுக்க முயற்சி செய்கிறார். அப்போது, அங்கு நின்றுக்கொண்டிருந்த நாய் உடனே ஓடிச் சென்று அந்த திருடனை கடிக்க சீறிப் பாய்க்கிறது.
நாய் தாக்குதவலை உணர்ந்துக் கொண்ட திருடன் சட்டென்று அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலர் அந்த நாயின் அறிவை வியந்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
We don’t deserve Dogs ? ? pic.twitter.com/FytxHKfd9T
— Tansu YEĞEN (@TansuYegen) June 8, 2022