குழந்தை செய்யும் சேட்டையை பொறுமையா தாங்கிக்கொண்ட பசு - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini 6 மாதங்கள் முன்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், ஒரு பெரிய பசு மாட்டின் மீது இரண்டரை வயது குழந்தை ஒன்று ஏறி, மிதித்து விளையாடுகிறது. ஆனால், அந்த பசு மாடு அந்த குழந்தையை ஏதும் செய்யாமல் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. அந்த குழந்தை அந்த மாட்டின் கழுத்தில் ஏறி உட்கார்ந்து அட்ராசிட்டி செய்கிறது. குழந்தை செய்யும் அனைத்தையும் மிகவும் பொறுத்துக் கொண்டு, வலியை தாங்கிக்கொண்டும் அந்த பசு மாடு இருக்கிறது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா. என்ன ஒரு அழகு, குழந்தை செய்யும் சேட்டையையும், வலியையும் தாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறது. இதுதான் தாய் மனசு... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral video