மின்னல் வேகத்தில் வந்த ரயில்... தற்கொலைக்கு முயன்ற நபர் - கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ஊழியர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ -
அந்த வீடியோவில், ஒரு ரயில் ஒன்று மின்னல் வேகத்தில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, ரயில் ப்ளாட்பாரத்தில் ரயில் வருவதை ஊழியர் ஒருவர் கவனித்து கையில் பச்சை கொடியோடு நடந்து வந்தார். அப்போது, ரயில் மின்னல் வேகத்தில் வந்தபோது, தண்டவாளத்தில் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக படுத்துக்கொண்டு இருந்தார்.
இதைப் பார்த்த ரயில்வே ஊழியர் தன் உயிரை பணயம் வைத்து தண்டவாளத்தில் குதித்து ரயில் பாதையில் படுத்துக்கிடந்த நபரை தூக்கி அந்தப் பக்கத்திற்கு கொண்டு சென்றார். அவர் பார்க்கவில்லையென்றால் கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபரின் உயிர் பறிபோயிருக்கும்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்ற ரயில் பாதையில் குதித்த ஊழியருக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Meet our real life Super Hero H Satish Kumar who jumped on railway track to save a precious life.
— Vikas (@VikasPronamo) June 23, 2022
There are ones who destroy countries assets and here is our brave heart? pic.twitter.com/5BQHgnxXlc
