நகங்கள் இல்லாத விரல்கள் - அதிரவைக்கும் புகைப்படம்!
கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகங்கள் இல்லை
ஒருவருக்கு 5 விரல்களும் உள்ளது. ஆனால், அதில் எதிலுமே நகங்கள் இல்லை. இந்த புகைப்படம்தான் தீயாய் பரவி வருகிறது. இது ஒரு அரியவகை பாதிப்பு என்று கூறப்படுகிறது. இந்த பாதிப்பு அனோனிச்சியா காங்கினிடா என அழைக்கப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காதாம். அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.
அதிர்ச்சி தகவல்
இந்தப் பாதிப்பு குறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் தெரிவிக்கையில், அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை.
ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது.