எய்ட்ஸ் பாதிப்பில் இருந்து சிகிச்சையே இல்லாமல் குணமடைந்த பெண் - மருத்துவ உலகம் வியப்பு

Argentina hivvirus
By Petchi Avudaiappan Nov 24, 2021 09:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் ஹெச்.ஐ.வி. வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எய்ட்ஸ் என்பது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். ஹெச்.ஐ.வி. எனப்படும் வைரஸ் தான் எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகிறது. முறையற்ற பாலியல் உறவு, இரத்தம், தாயிடம் குழந்தைக்கு ஆகிய வழிகள் மூலம் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோயாக எய்ட்ஸ் உள்ளது.

உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக அறியப்படும்  எய்ட்ஸ்  நோயில் இருந்து இதுவரை இரண்டு பேர் மட்டுமே  சிகிச்சை மூலம் குணமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த Loreen Willenberg என்ற பெண் எய்ட்ஸ் தொற்றில் இருந்து எவ்வித சிகிச்சையும் இன்று குணமடைந்தார்.

தற்போது அர்ஜெண்டினாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் எவ்வித சிகிச்சையும் இன்றி ஹெச்.ஐ.வி. தொற்றில் இருந்து முழுதும் குணமடைந்துள்ளார்.2013 ஆம் ஆண்டு Esperanza பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு ஹெச் .ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.   8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஹெச்.ஐ.வி.பாதிப்பு அவரிடம் இருந்து முழுமையாக மறைந்துள்ளது.

அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் இயற்கையாகவே அவர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இருக்கலாம் என மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இது மருத்துவ உலகில்  புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.