டீசலில் பரோட்டாவா..? பார்ப்போரை அதிரவைத்த கடைக்காரர்!

India Haryana
By Karthick May 15, 2024 10:38 AM GMT
Report

புதுவைகயான பல விதமான உணவு வகைகளை தற்போது பலரும் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.

டீசல் பரோட்டா

அப்படி ஒன்று தான் அண்மையில், இணையத்தில் வெளியாகி பார்ப்போருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. என்ன விஷயமென்றால், டீலை வைத்து நபர் ஒருவர் பரோட்டா செய்கிறார்.

diesel parotta

இதனை தயாரிப்பவர் சாதாரணமாக தவா மீது பரோட்டாவை போட்டு அதன் மீது கணக்கில்லாமல் டீசலை ஊற்றுகிறார். அதை டீசலில் நன்றாக வேக வைத்து அதிலிருந்து எடுத்து சாப்பிடவும் தயார் என்பதை போல நிற்கிறார்.


இந்த பரோட்டா சண்டிகரின் ஒரு தெருக்கடையில் செய்யப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் trending'இல் மதுரை பன் பரோட்டா - இவர் தான் காரணமா.?

ஆஸ்திரேலியாவில் trending'இல் மதுரை பன் பரோட்டா - இவர் தான் காரணமா.?

உண்மையாகவே டீசல் தானா 

வீடியோ வலைதளத்தில் வைரலான நிலையில் தாபாவின் உரிமையாளர் சன்னி சிங் இது குறித்து உண்மையை கூறியுள்ளார். தாங்கள் டீசல் பரோட்டா போன்ற எதையும் தயாரிக்க வில்லை என்று உறுதிபட தெரிவித்த அவர், அதனை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறவும் இல்லை என உறுதிபட மறுத்துள்ளார்.

diesel parotta

ஒருவர் வீடியோவை வேடிக்கைக்காக பகிர்ந்திருக்கிறார் என்று குறிப்பிட்டு, அப்படி டீசலில் பரோட்டாவை யாருமே சமைக்கவும் மாட்டார்கள், சாப்பிட மாட்டார்கள் என கூறினார். உண்மையில் வீடியோவை காணும் போது அவர் டீசல் போல இருக்கும் எண்ணையை தான் ஊற்றுகிறார்.