ஆஸ்திரேலியாவில் trending'இல் மதுரை பன் பரோட்டா - இவர் தான் காரணமா.?
மதுரையில் பிரபலமான பன் பரோட்டா தற்போதுஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமடைந்து ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
கேரி மெஹிகன்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணர் கேரி மெஹிகன். இந்தியா வந்துள்ள இவர் அண்மையில் மதுரையில் பன் பரோட்டா தயாராவதை குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரலான வீடியோ
அதில்,இந்த வீடியோ வைரலான நிலையில், தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது மதுரை பான் பரோட்டா. மைதாவுடன் முட்டை, பால் சேர்த்து 30 நிமிடங்கள் எண்ணையில் இந்த மாவு ஊர வைக்கப்படும். இதன்பின்னர் பன் போன்று உருட்டி எண்ணெயில் பொரித்து பன் பரோட்டா சமைக்கப்படுகிறது.

மதுரையில் இந்த பன் பரோட்டாவை தவிர மைதா பரோட்டா சில்லி பரோட்டா செட் பரோட்டா, பன்னீர் பரோட்டா, எண்ணெய் பரோட்டா பல வகையான பரோட்டாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil