மனிதர்களை இழுக்க அப்படி நடிக்கும் முதலைகள் - படு வைரலாகும் வீடியோ!
மனிதர்களை வேட்டையாட முதலைகள் நடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.
நடிக்கும் முதலைகள்?
இந்தோனேசியாவின் பொர்னியோ மாகாணத்தில் உள்ள பரிட்டோ நதியில், முதலைகள் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் உப்பு நீர் முதலைகள் தண்ணீருக்குள் தலைகீழாக திரும்பி, உதவிக் கேட்பதுபோல் தங்களின் கால் விரல்களை நீட்டிப்பதாக காட்டப்படுகின்றன.
இந்த நடத்தை மனிதர்கள் தண்ணீரில் மூழ்குகிறார்கள் என்று தோன்றுகிறது, மேலும் அந்த வீடியோவை நம்பி தண்ணீரில் இறங்கும் மனிதர்களை கவர்ந்து கொன்று உண்ணும் எனும் கருத்து பரப்பப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் சுமார் 5 கோடி பார்வைகள் அடைந்துள்ள நிலையில், உயிரியல் நிபுணர்கள் இவ்வாறு முதலைகள் நடப்பதன் உண்மையை மறுத்துள்ளனர். அவர்களின் கூற்றப்படி, அந்த முதலைகள் தங்களின் இயல்பான வேட்டை முறைகளுக்காகவே இவ்வாறு செயல்பட்டிருக்கலாம்.
மனிதர்களைப் போல கையை அசைத்து காப்பாற்ற சொல்லி ஏமாற்றும் முதலைகள் 🤔 pic.twitter.com/v2vh1a1tSi
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) January 11, 2025
மனிதர்களை கவர்ந்து கொல்லவே இதை செய்வதாக கூறுவது தவறான தகவலாகும். சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றுக்கணக்கான மனிதர்கள் முதலைகளால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். அதிலும், உப்பு நீர் முதலைகளின் தாக்குதலே அதிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.