இந்த ஒரு நாட்டோட பாஸ்போர்ட் இருந்தா போதும் - 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்!
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
நடப்பாண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டிற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியுமாம். இந்த பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 193 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும்.
பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா, ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பாஸ்போர்ட் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
முதலிடம் எதற்கு
நான்காவது இடத்தில் ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து , லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 85ஆவது இடத்தில் இருந்த இந்திய பாஸ்போர்ட் 2025 ஆம் ஆண்டில் 80ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகள் மோசமான இடத்தில் உள்ளன.