இந்தியர்கள் 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் - எந்தெந்த நாடுகள் தெரியுமா?
விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க அனுமதிக்கும் 20 நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியர்கள்
நம்மில் பலரும் உலகைச் சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அப்படி சர்வதேச அளவில் பயணம் செய்பவர்களுக்கு இரண்டு விதமான பயண ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாக ஒரு நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோர், அந்த நாட்டின் எல்லையைக் கடப்பதற்கு வழங்கப்படும் உரிமை ஆவணம் தான் பாஸ்போர்ட். இது பெரும்பாலும் அந்த நாட்டை சேர்ந்த குடிமக்களுக்கே வழங்கப்படும்.
அந்த பாஸ்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு தனது சொந்த நாட்டில் இருந்து வேறொரு நாட்டிற்கு செல்வர்களுக்கு அந்த நாடு வழங்குவது தான் விசா. ஒரு சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கு விசா தேவையில்லை என்று விதிவிலக்கு உண்டு.
விசா
அந்த வகையில் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க 20 நாடுகள் அனுமதி அளித்துள்ளது. உதாரணத்திற்கு விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளுக்கு இந்திய பாஸ்போர்ட் கொண்டு செல்லலாம். இதற்கு விசா பெறவேண்டிய தேவை இல்லை. அதன்படி, விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க 20 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது.
பூட்டான்,மொரீசியஸ் ,மலேசியா,நேபாளம்,மியான்மர்,ஓமன்,கத்தார்,இலங்கை,கசகஸ்தான்,ஃபிஜி,ஹைத்தி,ஜமாய்கா,பார்படாஸ்,சீசெலிஸ்,டிரினிடாட் மற்றும் டொபாகோ,இஐ சால்வடார்,மாக்குவா,துனிசியா,டாமினிக்கா ,தாய்லாந்து,உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாகச் செல்லலாம்.