7ம் கட்ட தேர்தல்; அரங்கேறிய வன்முறை - தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Lokesh Kanagaraj West Bengal
By Swetha Jun 01, 2024 05:59 AM GMT
Report

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

7ம் கட்ட தேர்தல்

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடக்க இருந்தது. இதில் முதல் 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தற்போது 7வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

7ம் கட்ட தேர்தல்; அரங்கேறிய வன்முறை - தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! | Violence Repoted In West Bengal On Election Day

இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல்,

மக்களவை தேர்தல்; 4ம் கட்ட வாக்குப்பதிவு - வாக்கு எந்திரங்கள் அடித்து உடைப்பு!

மக்களவை தேர்தல்; 4ம் கட்ட வாக்குப்பதிவு - வாக்கு எந்திரங்கள் அடித்து உடைப்பு!

வாக்குப்பதிவு இயந்திரம்

காலை தொடங்கியதில் இருந்து வன்முறை அரங்கேறியுள்ளது. இந்த சூழலில், அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரம் ஆகியவை தண்ணீரில் வீசப்பட்டன. ஆனால், இந்த இயந்திரங்கள், பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் இயந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7ம் கட்ட தேர்தல்; அரங்கேறிய வன்முறை - தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! | Violence Repoted In West Bengal On Election Day

அதேபோல பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு சேர்நத கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.அதுமட்டுமல்லாமல், கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள காசிபோரில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக வேட்பாளர் தபாஸ் ராய்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, சந்தேஷ்காலியில் பாஜகவைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களின் வீடுகளுக்கு சென்ற திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், போலீஸார் சென்று அவர்களை மிரட்டியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.