பயங்கரம்: இரு பிரிவினரிடையே வன்முறை - 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு!
மிலாது நபிக்காக வைக்கப்பட்டிருந்த மதக்கொடிகள் கிழிக்கப்பட்டு ஏற்பட்ட வன்முறையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வன்முறை
கொல்கத்தா, மொமின்பூரில் லட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். மேலும், மிலாது நபிக்காக வைக்கப்பட்டிருந்த மதக்கொடிகள் கிழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் அங்கு வன்முறை நிலவியது.
அதில், லட்சுமி பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையில், துணை போலீஸ் கமிஷனர் உட்பட பல போலீசார் காயமடைந்துள்ளனர்.
144 தடை
துணை போலீஸ் கமிஷனர் சவுமியா ராய் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா எக்பால்பூர் பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடவோ அல்லது பெரிய கூட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இன்று முதல் அக்டோபர் 12 வரை மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் மற்றும் பொது அமைதியை சீர்குலைக்கும் எவரும் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அப்பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் உள்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.