பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை,குற்றச்செயல்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK
By Jiyath Oct 11, 2023 09:00 AM GMT
Report

பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.       

முக்கொம்பு விவகாரம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக கூடியது. இதில் திருச்சி முக்கொம்பில் சிறுமிக்கு காவலர்கள் பாலியல் வன்கொடுமை கொடுத்தது தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர்.

பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை,குற்றச்செயல்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Violence Against Women Children Impartial Action

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது "திருச்சி மாவட்டம் முக்கொம்பில் காவலர்கள் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தொடர்பாக, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அன்றைய தினமே 3 காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

அதெல்லாம் என்னோட உரிமை...நீங்க சொல்லாதீங்க !! சபாநாயகர் vs எதிர்க்கட்சி தலைவர் - காரசார விவாதம்!!

அதெல்லாம் என்னோட உரிமை...நீங்க சொல்லாதீங்க !! சபாநாயகர் vs எதிர்க்கட்சி தலைவர் - காரசார விவாதம்!!

பாரபட்சமின்றி நடவடிக்கை

காவல்நிலையத்தில் புகார் அளித்தவுடன் உடனடியாக, மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை,குற்றச்செயல்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Violence Against Women Children Impartial Action

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும்' மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.