#BodyShaming ..மன்னிப்பெல்லாம் கேக்கவே இல்ல...!! நிக்சன் குறித்து திடீரென பதிவிட்ட வினுஷா!!

Bigg Boss Tamil Actress
By Karthick Nov 09, 2023 09:00 AM GMT
Report

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தன்னிடம் நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை என வினுஷா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

நிக்சன்

போட்டியாளரான வினுஷா குறித்து நிக்சன் கூறிய கருத்துக்களுக்கு விளக்கம் கொடுத்த அவர்,தான் தவறாக எதுவும் பேசவில்லை என குறிப்பிட்டு, இது குறித்து தான் வினுஷாவிடமே கூட மன்னிப்பு கோரியதாக குறிப்பிட்டார்.

vinusha-condemns-nixen-about-bodyshaming-her

இருப்பினும், அவர் Bodyshaming தான் செய்துள்ளார் என கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் அதிகளவில் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. இதற்கிடையில், வினுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பெரிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வினுஷா பதிவு

அதில் இப்போது நான் பிக் பாஸ் வீட்டில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இது குறித்து பேசி எனக்காக நான் நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் வாரத்தில் வேண்டும் நிக்சனுக்கும் எனக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது அவரை நான் என்னுடைய தம்பியாக தான் நினைத்தேன். அவரை தம்பியாக நினைத்து தான் அவரிடம் பழகினேன். ஆரம்பத்தில் அவர் என்னை கேலி செய்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எல்லாம் ஜாலிகாக தான் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

vinusha-condemns-nixen-about-bodyshaming-her

ஆனால் போகப் போக அவர் என்னிடம் எல்லை மீறியதால் இனிமேல் அப்படி பேச வேண்டாம் உங்களுடைய நடவடிக்கை என்னை காயப்படுத்துகிறது என்று கூறிவிட்டதோடு அவரை இணைந்த காயப்படுத்துகிறது நான் அவரை நாமினேட்டும் செய்தேன் ஒருநாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார் ஆனால் என்னை கேலி செய்ததற்காகத்தான் மன்னிப்பு கேட்டாரே தவிர இப்படி என்னை உறவுக்கு எலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை

vinusha-condemns-nixen-about-bodyshaming-her

இந்த விஷயத்தில் நான் தெள்ளத் தெளிவாக சில விஷயத்தை கூற விரும்புகிறேன்

1.பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நெக்சன் என்னை உருவ கேலி செய்ததற்காக மன்னிப்பு கேட்கவில்லை.

2.நிக்சன் என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்குத் தெரியும் என்றும் பொய் அனைத்தும் “இல்லை, எனக்கு தெரியாது”.

மாயா ஒரு லெஸ்பியன்...அவருடன் கூட உறவில் இருந்தா..? ஷாக்கிங் நியூஸ் சொன்ன பிரபலம்

மாயா ஒரு லெஸ்பியன்...அவருடன் கூட உறவில் இருந்தா..? ஷாக்கிங் நியூஸ் சொன்ன பிரபலம்

3. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வந்த பின்னர் தான் அதைப் பற்றி அறிந்தேன்.

4. நிக்சன் இப்போது மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது.

5. Bully Gangகிற்கு என் பதில் என்னவெனில் ‘என்னைப் புறக்கணிப்பது நிச்சயமாக எனக்கு வேடிக்கையாகவோ நகைச்சுவையாகவோ இல்லை’ 6. போன வாரம் உரிமை குரல் தூக்கிய Feminist கும்பல் எங்கே?   

எனக்காக குரல் கொடுத்த விச்சுமாவிற்கு நன்றி. நான் வீட்டில் இருக்கும் போது நிக்சனை மிகவும்மதித்தேன். அவர் எனக்கு ஏற்படுத்திய வலியை மீறி அவரை ஒரு சகோதரனைப் வலியை கருதினேன். இருப்பினும், அவர் என்னைப் பற்றி கூறிய வீடியோவை பார்த்த பிறகு, நான் அவர் மீது வைத்த மரியாதையை இழந்துவிட்டேன். வார இறுதி எபிசோடில் கமல் சார் இதை பற்றி பேசுவார் என்று நம்புகிறேன். இந்த பிரச்சினையில் நிக்சனுக்கு எதிராக நிற்கும் மக்களுக்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.