இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியா இது? உருக்குலைந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ!

Sachin Tendulkar Cricket India
By Vidhya Senthil Aug 06, 2024 01:03 PM GMT
Report

சச்சின் டெண்டுல்கரின்நண்பரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வினோத் காம்ப்ளி

1990-களில் கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் நுழைந்தார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் நண்பரான வினோத் காம்ப்ளியின் நுழைவு அவ்வளவு எளிதாக அமையவில்லை . 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் நுழைந்தார். கபில்தேவ், ஶ்ரீகாந்த், அசாருதின், சாஸ்திரி, சித்து என சீனியர்கள் பலரும் இருந்ததால் நான்காவது டவுன் அல்லது ஐந்தாவது டவுன் வீரராகத்தான் களமிறக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியா இது? உருக்குலைந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ! | Vinod Kambli Able To Walk Viral Video

இதனை தொடர்ந்து 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது . இதில் வினோத் காம்ப்ளி பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார் .

இதனால் ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபடவே ஆட்டம் கைவிடப்பட்ட போது அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே சென்ற காட்சியை இன்றளவும் யாரும் மறப்பதற்கில்லை.

ஒரே போட்டி...சச்சின், சங்கக்கரா சாதனையை நொறுக்கிய விராட் கோலி!!

ஒரே போட்டி...சச்சின், சங்கக்கரா சாதனையை நொறுக்கிய விராட் கோலி!!

 கிரிக்கெட் வெறியன்

இதனை 17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது சராசரி 59.67.ஆகும் . குறிப்பாக சச்சினுக்கு அவரது அண்ணன் மிகப்பெரிய பலம். சச்சின் ஃபோகஸ் இழந்துவிடாமல் கரியர் முழுவதும் அவரைத்தாங்கிப்பிடித்துக்கொண்டே வந்தார் .

ஆனால் காம்ப்ளிக்கு அப்படியாரும் இல்லை. தவறும்போது தாங்கிப்பிடிக்க உறவோ, நட்போ, காதலோ இல்லை . இந்த நிலையில் தான் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.