இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியா இது? உருக்குலைந்த ரசிகர்கள்- வைரல் வீடியோ!
சச்சின் டெண்டுல்கரின்நண்பரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வினோத் காம்ப்ளி
1990-களில் கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் நுழைந்தார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் நண்பரான வினோத் காம்ப்ளியின் நுழைவு அவ்வளவு எளிதாக அமையவில்லை . 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் நுழைந்தார். கபில்தேவ், ஶ்ரீகாந்த், அசாருதின், சாஸ்திரி, சித்து என சீனியர்கள் பலரும் இருந்ததால் நான்காவது டவுன் அல்லது ஐந்தாவது டவுன் வீரராகத்தான் களமிறக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து 1993-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது . இதில் வினோத் காம்ப்ளி பெயர் உச்சம் பெற்றது. இத்தனைப் பிரமாதமான திறமை இருந்தும் 1996 உலகக் கோப்பை அரையிறுதியில் காலிறுதிப் போட்டியில் ஈடன் கார்டனில் டாஸ் வென்று பேட் செய்வதற்குப் பதிலாக கேப்டன் அசாருதீன் பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார் .
இதனால் ரசிகர்கள் உள்ளே புகுந்து கலாட்டாவிலும் ரகளையிலும் ஈடுபடவே ஆட்டம் கைவிடப்பட்ட போது அப்போது வினோத் காம்ப்ளி அழுதுகொண்டே சென்ற காட்சியை இன்றளவும் யாரும் மறப்பதற்கில்லை.
கிரிக்கெட் வெறியன்
இதனை 17 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே ஆடிய வினோத் காம்ப்ளி 4 சதங்கள் 3 அரைசதங்களுடன் 227 என்ற அதிகபட்ச ஸ்கோருடன் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியில் எடுத்து ஓய்வு அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2477 ரன்களை 2 சதங்கள் 14 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் இவரது சராசரி 59.67.ஆகும் .
குறிப்பாக சச்சினுக்கு அவரது அண்ணன் மிகப்பெரிய பலம். சச்சின் ஃபோகஸ் இழந்துவிடாமல் கரியர் முழுவதும் அவரைத்தாங்கிப்பிடித்துக்கொண்டே வந்தார் .
ஆனால் காம்ப்ளிக்கு அப்படியாரும் இல்லை. தவறும்போது தாங்கிப்பிடிக்க உறவோ, நட்போ, காதலோ இல்லை .
இந்த நிலையில் தான் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் தூக்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.