வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா? சர்வதேச தீர்ப்பாயம் சொல்வது என்ன?

India Paris 2024 Summer Olympics
By Karthikraja Aug 11, 2024 06:54 AM GMT
Report

வினேஷ் போகத்தின் மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது.தற்போது வரை இந்தியா 1 வெள்ளி 5 வெண்கல பதக்கங்கள் வென்று தரவரிசை பட்டியலில் 71 வது இடத்தில் உள்ளது. 

vimesh phogat

மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆனால் அனுமதிக்கப்பட்ட உடல் எடையை விட 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

வினேஷ் போகத் விவகாரம் - விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வினேஷ் போகத் விவகாரம் - விளையாட்டு போட்டிகளுக்கான தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வினேஷ் போகத்

இதனையடுத்து தனது ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வெளிநடப்பு செய்தனர். 

vimesh phogat

இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் விளையாட்டுத்துறைக்கான சர்வதேச தீர்ப்பாயத்தில் தனக்கு வெள்ளி பதக்கமாவது வழங்கப்பட வேண்டுமென வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார்.

தீர்ப்பு

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சாவ்லே ஆஜரானார். வெள்ளிக்கிழமையே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று இருந்த நிலையில், அதன் பின் நேற்று இரவு 9;30 மணிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அப்பொழுதும் தீர்ப்பு வெளியாகாத நிலையில், இன்று(11.08.2024) தீர்ப்பு வெளியாகும் என தெரிவித்த இந்திய ஒலிம்பிக் ஆணையம், 13.08.2024 அன்று தீர்ப்பு வெளியாகும் என கூறியுள்ளது.

வினேஷ் போகத் மற்றும் யுனைடெட் வேர்ல்ட் ரெஸ்லிங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தரப்பு இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென்று சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குழப்பம் மற்றும் கால தாமதத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.