இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் - ராகுல்காந்தி புகழாரம்!
இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் வீரமிகு மகளின் முன்னால் சரிந்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் போட்டியில் 50 கிலோ பிரிவில் கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை 5-0 என்ற கணக்கில் என்ற கணக்கில் வென்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அசத்தியுள்ளார்.
உலகின் நம்பர்.1 வீரரையும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சுசாகி உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து வரலாற்று சாதனை பெற்றார். இந்த நிலையில் இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் வீரமிகு மகளின் முன்னால் சரிந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புகழாரம் தெரிவித்துள்ளார்.
ராகுல் புகழாரம்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' உலகின் 3 முன்னணி மல்யுத்த வீராங்கனைகளை ஒரே நாளில் வீழ்த்திய வினேஷ் உடன் சேர்ந்து, ஒட்டுமொத்த நாடும் இன்று உணர்ச்சிவயப்பட்டுள்ளது.
வினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் போராடியபோது, அவர்களின் நோக்கம் குறித்தும், திறன் குறித்தும் கேள்வி எழுப்பி, களங்கம் கற்பித்தவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் வீரமிகு மகளின் முன்னால் சரிந்துள்ளது.
களத்தில் இருந்து பதிலடி தருவதுதான் சாம்பியன்களின் குணம். வாழ்த்துகள் வினேஷ். பாரிஸில் நீங்கள் பெற்ற வெற்றிகளின் எதிரொலி டெல்லி வரை தெளிவாக கேட்கிறது என்று தெரிவித்துள்ளார்.