ஏன் அதிமுக தலைவர்கள் விஜய்யை விமர்சிப்பதில்லை - போட்டுடைத்த விந்தியா
விஜய்யை ஏன் அதிமுக தலைவர்கள் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு விந்தியா விளக்கமளித்துள்ளார்.
விஜய் அரசியல்
சென்னையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் விந்தியா கலந்துக்கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"விஜய் இதுவரை அரசியல் ஆரம்பிக்கவில்லை. அவருடைய கொள்கை என்ன என்பதே தெரியவில்லை. இன்னும் ஹோட்டலில் இருந்து தன் அரசியல் ஆசையை வளர்த்துக்கொண்டு இருக்கிறார். தவெக தலைவர் விஜய் முதலில் வீதிக்கு வந்து போராடட்டும்.
விந்தியா கருத்து
அவர் அரசியல் செய்வது குறித்து பின்னர் பேசலாம். விஜய்க்கு பரந்த ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் செல்லும் இடங்களில் கூட்டம் இருக்கும். தமிழ்நாடு பல்வேறு தலைவர்களைக் கண்டுள்ளது, ஆரம்பத்தில் அதைப்பற்றி பேச வேண்டாம்.
மக்களும் தொண்டர்களும் ஆதரவு அளித்ததின் காரணமாகவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறலாம் என்று தொண்டர்களும் பொதுமக்களும் நம்பினர், அதை அவர் நிறைவேற்றியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவதே தங்களது பணி. அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததால் அனைவரும் சந்தோஷமாக இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.