விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்க - குபேரன் போல செல்வம் கொட்டும்!
Vinayagar Chaturthi
By Sumathi
10 months ago
விநாயகருக்கு பிடித்த வழிபாட்டை செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழலாம்.
விநாயகர் வழிபாடு
விநாயகர் அவதரித்த தினமான இன்று விநாயகர் சதுர்த்தியாக நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகருக்கு மிகவும் பிடித்தது அறுகம் புல்.
கடனிலிருந்து விடுபட அறுகம் புல்லைப் பயன்படுத்துவது மூலம் பலன்கள் கிட்டும். கூடவே, 11 லட்டுகள் வைக்கலாம். விநாயக சதுர்த்தி அன்று வீட்டில் மரப் பலகையில் சிவப்புத் துணியை விரித்து அதன் மீது விநாயகரின் சிலையை வைக்க வேண்டும்.
செல்வ செழிப்பு
அவரின் இடதுபுறத்தில் அருகம் புல்லை வைக்க வேண்டும். 21 அருகம் புல்லைக் கொண்டு ஒரு அறுகம்புல் கட்டை உருவாக்கவும். இதேபோல் 11 கட்டுகளைச் செய்து அவரின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு வழிபட்டால் குபேரனுக்கு இணையான செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.