குரு வக்ர பெயர்ச்சியால் அடித்த ஜாக்பாட் ..இந்த ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம்தான்!
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குரு பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரருக்கும் வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் பயணித்து வரும் குரு மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். எனவே, தற்போது இருக்கூடிய நாட்களில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குருவின் சிறப்பான அருள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசியில் 12 ஆம் இடத்தில் குரு இருந்தார்.இப்போது ஜென்ம இடத்தில் மாறிய குரு உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே சரியான முறையில் திட்டமிடவும். புதிய வேலை வாய்ப்பு அல்லது புதிய தொழிலை தொடங்கலாம்.திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
சிம்மம்

உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் குரு பயணிக்கிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும். தொழிலில் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். இதுவரை உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும் . நிதி நிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென சம்பளம் உயர வாய்ப்புகளும் கூட உண்டு. வீடு வாங்கும் யோகம் கிட்டும்.
கன்னி

உங்கள் ராசியில் 8 ஆம் இடத்தில் இருந்த குரு 9 ஆம் இடத்தில் பயணித்து வருகிறார். பொருளாதாரம் உயரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் மீண்டும் செயல்படத் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும் . வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கன்னி ராசிக்காரர்களுக்கு இனி நன்மை உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan