அப்படி கஷ்டப்படுத்தாதீங்க.. ட்ரெண்டிங்கில் வில்லிசை மாதவி - உருக்கமான வேண்டுகோள்!

Tirunelveli
By Sumathi Jun 28, 2023 05:08 AM GMT
Report

வில்லுப்பாட்டு பாடி வரும் மாதவி ரசிகர்களிடம் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

வில்லுப்பாட்டு மாதவி

தென்காசி. அச்சங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவி(19). இவர் தந்தை மாரிசெல்வம் கொத்தனாராக உள்ளார். தாய் மாலதி பீடி சுற்றி வருகிறார். இவருக்கு 2 சகோதரிகள், 1 சகோதரன். வில்லுப்பாட்டின் மீது உள்ள ஆர்வத்தால் முறைப்படி கற்று சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக பாடிக் கொண்டிருக்கிறார்.

அப்படி கஷ்டப்படுத்தாதீங்க.. ட்ரெண்டிங்கில் வில்லிசை மாதவி - உருக்கமான வேண்டுகோள்! | Villuppattu Madhavi About Negative Comments Video

இவரது தமிழ், நகைச்சுவை, வில்லுபாட்டை பாடும் விதம் என ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது வில்லுப்பாட்டு வீடியோ தான் இணையத்தை கலக்கி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ள மாதவி, நீங்க மனசார யோசித்து பார்த்து கமெண்ட் போடுங்க.

வேண்டுகோள்

உங்களுக்கு வீடியோ புடிச்சிருந்தா பாருங்க, இல்ல புடிக்கலையா அத ஃப்ரியா விட்டுருங்க. நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணல. நான் எந்த தப்பும் பண்ணல. நான் ஏதும் தவறாக பேசல. எனக்கு பிடிச்சத நான் பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நாம நல்லது பண்ணுனா நமக்கு நல்லது நடக்கும்.

அப்படி கஷ்டப்படுத்தாதீங்க.. ட்ரெண்டிங்கில் வில்லிசை மாதவி - உருக்கமான வேண்டுகோள்! | Villuppattu Madhavi About Negative Comments Video

கெட்டதை பண்ணுனா திருப்பி நமக்கு கெட்டது தான் நடக்கும். நீங்க எனக்கு மட்டும் இல்ல சோசியல் மீடியாவில, யூடியூப்ல யாருடைய வீடியோவுக்கும் தப்பா கமெண்ட் போடாதீங்க. அவங்க உங்களுக்கு புடிச்சத செஞ்சுட்டு வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

அது உங்களுக்கு பிடிக்கலை என்பதற்காக அவர்களை கஷ்டப்படுத்தாதீங்க எனத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.