பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு
மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முக்கியமாக, எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ; பாடகி சித்ரா பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம ஸ்ரீ விருது பட்டிமன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா தமிழகத்தை சேர்ந்த வேளாண் துறையில் புகழ்பெற்ற பாப்பம்மாள் தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் கோவையைச் சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்ரமணியன் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தமிழகத்தைச் சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா.
ஜோஹொ நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 103 பேருக்கு மத்திய அரசு பதம்ஸ்ரீ விருது அறிவித்துள்ளது. பத்ம விபூஷன் விருது மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன். கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவர் பெல்லே மோனப்பா. அமெரிக்காவைச் சேர்ந்த நரிந்தர் சிங் கபானி ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே.
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன். டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுத்தீன் கான். பி.பி.லால் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம பூஷன் விருது மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறைந்த மத்தியமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய் மதகுரு கல்பே சாதிக்.
பிரபல பின்னணி பாடகி சித்ரா
கேசுபாய் பட்டேல் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது