புதையலுக்காக கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய மக்கள் - காத்திருந்த அதிர்ச்சி!
புதையலுக்காக கிராமத்தினர் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
12 ஆம் நூற்றாண்டு கோட்டை
ராஜஸ்தான், பூன்டி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 12 ஆம் நூற்றாண்டின்போது கட்டப்பட்ட கோட்டைகள் அமைந்துள்ளன. இந்த கோட்டைக்கு அடியில் புதையல் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
இதனையடுத்து புதையலை எடுக்கும் ஆசையில் அங்குள்ள கிராம மக்கள் இரவோடு இரவாக கோட்டையை இடித்து தரை மட்டம் ஆக்கியுள்ளனர். ஆனால், புதையலுக்கு பதிலாக அவர்களுக்கு இடிந்த கற்குவியல்தான் பரிசாக கிடைத்துள்ளது.
பரவிய வதந்தி
இந்த கோட்டைக்கு செல்வதற்கான சாலை மிகவும் கடுமையாக இருப்பதால் ஆடு மேய்ப்பவர்கள் மட்டுமே செல்வார்களாம். புதையல் பற்றிய வதந்திக்குப் பிறகு பல கிராம மக்கள் இங்கு வந்தனர். கோட்டை அமைந்த பகுதியில் புலிகள் காப்பகம் கட்டப்பட்டபோது,
சுற்றுலா தலமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த புதையல் சம்பவத்தால் அது நடக்காமல் போனது.
இந்த கோட்டை ஆரவல்லி மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே கற்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. நான்கு ராணுவ நிலைகளால் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கைகளில் எடுத்துள்ள முக்கிய ஆயுதம்? கொம்பேறிமூக்கனாக மாற இருக்கும் இந்திய உளவுப் படை!! IBC Tamil
