உலகில் மழையே பெய்யாத கிராம் ஒன்று இருக்குனா நம்புவீங்களா? ஆச்சரிய தகவல்!
உலகில் மழையே பெய்யாத இடம் குறித்த பெரும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.
அதி உயரம்
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுதீப் என்ற கிராமம் அமைந்துள்ளது. இது தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது.
இந்த கிராமம் எப்போதும் வறண்டு கிடக்கிறது. பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது.
மழைக்கு வாய்ப்பில்லை
இங்கு, நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் மழை பெய்யாததற்கான காரணமாக கூறப்படுகிறது.
அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன.
சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். ஆனால், இந்த இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இந்த நிலை தொடர்கிறது.