தமிழகத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட்: ஆனால்... வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil nadu TN Weather Weather
By Sumathi Nov 15, 2022 05:34 AM GMT
Report

தமிழகத்தில் மிதமாக மழையே பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு 

தெற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில்

தமிழகத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட்: ஆனால்... வானிலை ஆய்வு மையம் தகவல்! | Tamilnadu Weather Update

இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மிதமான மழை

கடலோர பகுதிகளில் வரும் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனவும், 19ஆம் தேதி மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு. எனவே, சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால்

தென்கிழக்கு, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.