30 வருஷங்களாக மது, புகையிலைக்கு தடை விதித்த கிராமம் - ஆச்சர்ய தகவல்

Karnataka
By Sumathi Oct 03, 2024 06:12 AM GMT
Report

காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை கிராமம் ஒன்று கடைபிடித்து வருகிறது.

மது ஒழிப்பு கொள்கை

கர்நாடகா, கொப்பல் மாவட்டத்தில் காமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு 600 வீடுகள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசித்து வருகின்றனர்.

30 வருஷங்களாக மது, புகையிலைக்கு தடை விதித்த கிராமம் - ஆச்சர்ய தகவல் | Village Banned Sale Tobacco Liquor For 30 Years

இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு ஒரு ஹோட்டல் கூட இல்லை எனக் கூறப்படுகிறது.

'அப்போ திட்னாங்க, இப்போ பாராட்டுறாங்க' - ரூ.80க்கு தக்காளி விற்பனை செய்யும் ஊட்டி சகோதர்கள்!

'அப்போ திட்னாங்க, இப்போ பாராட்டுறாங்க' - ரூ.80க்கு தக்காளி விற்பனை செய்யும் ஊட்டி சகோதர்கள்!

குவியும் பாராட்டு

முன்னதாக, இந்த கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை அதிகரித்து காணப்பட்டுள்ளது. அதனால், மக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊர் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து இனி கிராமத்தில் மதுபானம், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.

30 வருஷங்களாக மது, புகையிலைக்கு தடை விதித்த கிராமம் - ஆச்சர்ய தகவல் | Village Banned Sale Tobacco Liquor For 30 Years

இதற்கு மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று உத்தரவிட்டனர். அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கிராமத்தில் மதுபாட்டிலோ, புகையிலை பொருட்களோ விற்பனை செய்யப்படவில்லை.

காந்தியின் மது ஒழிப்பு கொள்கையை மையமாக கொண்டு, இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதால் 'காந்தி கிராமம்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது கிராம மக்களின் இந்த செயல்பாட்டிற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.