மதுக்கடைகளை ஒரே நாளில் மூடி விடலாம் - திருமாவளவன்

M K Stalin Thol. Thirumavalavan
By Karthikraja Sep 22, 2024 09:33 AM GMT
Report

 மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் நடக்கின்றன என திருமாவளவன் பேசியுள்ளார்.

அதிமுகவுக்கு அழைப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டில் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என விசிக அழைப்பு விடுத்தது. இதனால் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளார் என தகவல் பரவியது. 

thirumavalavan

இதனையடுத்து ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். திமுக நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என ஸ்டாலின் உறுதியளித்தார். 

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

மது ஒழிப்பு மாநாடு

இந்நிலையில் தற்போது 'மதுவை ஒழிப்போம் மனிதவளம் காப்போம்’ எனக் குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் காணொளிகளைப் பதிவிட்டுள்ளார். இதில் பேசிய அவர், “உணர்வுப் பூர்வமான பிரச்சனையில் கை வைத்துள்ளோம். இது மற்ற மாநாடுகளைப் போல இது சாதாரண மாநாடு என்று நினைத்துவிடக் கூடாது.

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம் என்பார்கள். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் நடக்கும். இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. எந்த கட்சியைக் கேட்டாலும், மது தவறானது. மதுவை ஒழிக்க வேண்டும் என பேசுவார்கள். ஒரு கட்சிகூட மது இருப்பதால் என்ன தவறு, மதுக்கடைகள் இருப்பதால் என்ன தப்பு என்று சொல்ல வாய்ப்பே இல்லை. 

எல்லாக் கட்சிகளும் மது வேண்டாம். போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கும், மது ஆலைகள் இயங்கும். இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன?. அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்" என பேசியுள்ளார்.