ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா - சீமான் செய்த அட்வைஸ்

Thol. Thirumavalavan Seeman
By Karthikraja Sep 14, 2024 04:30 PM GMT
Report

ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவனின் கருத்தில் உறுதியாக இருக்குமாறு சீமான் தெரிவித்துள்ளார்.

விசிக  மது ஒழிப்பு மாநாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது.

thirumavalavan

இந்நிலையில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டு உடனே நீக்கப்பட்டது. மறுமுறை மீண்டும் பதிவேற்றப்பட்டு நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார். 

ஆட்சியில் பங்கு; வீடியோவை நீக்கிய திருமாவளவன் - தமிழக அரசியலில் பரபரப்பு

ஆட்சியில் பங்கு; வீடியோவை நீக்கிய திருமாவளவன் - தமிழக அரசியலில் பரபரப்பு

திருமாவளவன்

இந்த வீடியோவில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மனிதனுக்கும் அதிகாரம் என பேசியிருப்பார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மூப்பனார் காலத்தில் இருந்தே திருமாவளவன் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளார். 

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுகவுடன் அண்ணன் திருமாவளவன் கூட்டணிக்கு சென்றிருக்கலாம் அல்லவா? அப்போது ஏன் நிபந்தனை வைக்கவில்லை. இப்போதாவது அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் அடுத்த முறை கூட்டணி சேரும்போது யார் மதுவிலக்கு என்ற உறுதியை தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று அறிவிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். 

சீமான்

மேலும், “மது ஒழிப்பு கோரிக்கையை நீண்டகாலமாக முன்வைத்து போராடி வருவது பாமக நிறுவனர் ராமதாஸ் தான். இப்போது மதுவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுசேருவோம் என்று திருமாவளவன் சொல்கிறார். அப்படி என்றால் அவர் ஏன் பாமகவை அழைக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார். 

seeman

மது ஒழிப்பு மாநாட்டிற்கு என்னை தற்போது வரை திருமாவளவன் கூப்பிடவில்லை. கடைசி நேரத்தில் சொன்னால் கூட நான் வருவேன் என்று அவர் நினைத்திருக்கலாம் என தெரிவித்துள்ள்ளார்.