ஆட்சியில் பங்கு; வீடியோவை நீக்கிய திருமாவளவன் - தமிழக அரசியலில் பரபரப்பு
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.
விசிக மது ஒழிப்பு மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாடு நடத்த உள்ளது.
இந்த மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து கொண்டு எதிர் கட்சியான அதிமுகவிற்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன்
தேர்தல் அரசியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறினாலும் இந்த மாநாடு திமுகவிற்கு அழுத்தம் தரவே நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக சமீபத்தில் கள்ளச்சாராய சாவு நடந்து தமிழ்நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் இந்த மாநாடு நடத்தும் போது கண்டிப்பாக மாநாட்டில் திமுக அரசுக்கு எதிரான பேச்சுகள் எழ வாய்ப்புள்ளது.
மேலும் சமீபத்தில்தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் ஒரு காலத்திலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தமிழகத்தின் முதல்வராக ஆக முடியாது என திருமாவளவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆட்சியில் பங்கு
இந்நிலையில் தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று பேசிய பழைய விடியோவை பதிவிட்டு பின் வீடியோவை நீக்கியுள்ளார். அதன் பின் மீண்டும் அதே வீடியோவை பதிவிட்டு 2வது முறை வீடீயோவை நீக்கி விட்டார்.
ஆட்சியிலும் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு!#Thirumavalavan | #VCK | #MKStalin | #ibctamil pic.twitter.com/CBxOqwpp5a
— IBC Tamil (@ibctamilmedia) September 14, 2024
ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு திரும்பியுள்ள நிலையில் இந்த பழைய வீடியோவை பகிர்ந்ததன் மூலம் விசிக திமுக கூட்டணியிலிருந்து விலக உள்ளதா என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.