மக்கள் கள்ளச்சாராயத்தை ஒழிக்க சொல்லவில்லை மாறாக - திருமாவளவன்
நான் கள்ளக்குறிச்சி சென்ற போது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் கேட்கவில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
மதுவிலக்கு
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். அவர் தெரிவித்ததாவது, கள்ளச்சாராய சாவு இந்தியா முழுமைக்கும் உள்ளது. இதற்கு தீர்வு தேசிய அளவில் பூரண மதுவிலக்கு. காந்தியடிகள் கள் உட்பட அனைத்து போதை தரும் பொருட்களையும் தவிர்க்க சொன்னார். டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது.
நான் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் கேட்கவில்லை மாறாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என தான் கோரிக்கை வைத்தனர். மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான், ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு. முதல்வர் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.
விஜய்
மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மேலும், பெரியார் பிறந்த நாள் அன்று விசிக சார்பில் பூரண மது விலக்கை ஆதரித்து மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது.
தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் " என பேசியுள்ளார்.