Thursday, Jul 3, 2025

விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...வாக்குப்பதிவு தொடங்கியது!

Tamil nadu Viluppuram
By Swetha a year ago
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். ஆகையால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது.

விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...வாக்குப்பதிவு தொடங்கியது! | Vikravandi Mid Election Voting Has Started

24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள்,

விக்கிரவாண்டி இடைதேர்லில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க !! ஆதாரத்துடன் அன்புமணி

விக்கிரவாண்டி இடைதேர்லில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க !! ஆதாரத்துடன் அன்புமணி

வாக்குப்பதிவு 

18 சுயேச்சைவேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த முறை அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்தது. இந்த நிலையில், , இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்...வாக்குப்பதிவு தொடங்கியது! | Vikravandi Mid Election Voting Has Started

இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 13ஆம் தேதி நடக்கிறது.