விக்கிரவாண்டி இடைதேர்லில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்க !! ஆதாரத்துடன் அன்புமணி

Anbumani Ramadoss Tamil nadu DMK PMK Election
By Karthick Jul 03, 2024 09:08 AM GMT
Report

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப்பதிவில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வேட்டி, சேலைகளை விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணி பதிவு

இது தொடர்பாக அவரின் பதிவு வருமாறு,

ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி - சேலைகள் பறிமுதல்: திமுவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!

பொது எதிரி திமுக தான் - அதிமுக நண்பர்களே..எங்களுக்கு வாக்களியுங்கள்! அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

பொது எதிரி திமுக தான் - அதிமுக நண்பர்களே..எங்களுக்கு வாக்களியுங்கள்! அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசாரங்குப்பம் கிராமத்தில், திமுக கிளை செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஏ.சி. இராமலிங்கம் என்பவரின் வீட்டில் வைத்து, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட்டு வந்த வேட்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறிய திமுகவினரின் இந்த சட்டவிரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

Anbumani ramadoss urges to disqualify dmk candidate from vikravan

தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை கையூட்டாக வழங்கியதைக் கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு புகார் கொடுத்து வரவழைத்தனர். ராமலிங்கத்தின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி - சேலைகளை திமுகவினர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் செல்ல உதவி செய்துள்ளனர்.

மக்கள்விரோத செயல்

திமுகவின் மக்கள்விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஓட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்களின் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது. இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் திமுக, அரசு எந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயல்கிறது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது.