பொது எதிரி திமுக தான் - அதிமுக நண்பர்களே..எங்களுக்கு வாக்களியுங்கள்! அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

Anbumani Ramadoss Tamil nadu ADMK PMK DMDK
By Karthick Jul 02, 2024 09:44 AM GMT
Report

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வரும் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் நிலையில், கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதிமுக போட்டியிடாதது பெறும் சலசலப்பான ஒன்றே.

Vikravandi by election

கட்சி முடிவு என்றாலும், அந்த தொகுதி மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்து விடமாட்டார்கள். அவர்களின் வாக்கை தான் தற்போது அனைத்து கட்சிகளும் போட்டி போட்டி வருகிறார்கள்.

அதிமுக நண்பர்களே

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பின்னால் வைக்கப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடி, அண்ணாமலை ஆகியோரையும் சேர்த்து அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக ஆதரவை நோக்கி நகரும் நா.த.க?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக ஆதரவை நோக்கி நகரும் நா.த.க?


அதே நேரத்தில் அவர் பேசும் போது, அதிமுக நண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளை வைக்கிறேன். அதிமுக புறக்கணித்துள்ளார்கள். எனவே, பொதுஎதிரியான திமுக வீழ்த்த பாமகவின் வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என பேசினார்.

Anbumani request to admk and DMDK voters

இது சமூகநீதிக்கான தேர்தல் என்ற அவர், விரைவில் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்திற்கு வரவுள்ளதாக குறிப்பிட்டு, தேமுதிகவினரும் பாமகவின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.