விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - 2ம் சுற்று முடிவில் யார் முன்னிலை ?
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவன், பாமக சார்பில் சி.அன்புமணி வேட்பாளராக போட்டியிட்டனர்.
இந்த தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
முன்னிலை
இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாம் சுற்று முடிவின் படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 12,002 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 5,904 வாக்குகள் பெற்று 2 ம் இடமும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 849 வாக்குகள் பெற்று 3 ம் இடத்தில உள்ளார்.