விக்கிரவாண்டியில் பதற்றம் ; நாம் தமிழர் - திமுக இடையே கடும் மோதல் திணறிய போலீஸ்

Naam tamilar kachchi DMK
By Karthikraja Jul 07, 2024 02:06 AM GMT
Report

 விக்கிரவாண்டி பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதி ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

vikravandi by election

திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக தெராவி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட 100 க்கு மேற்பட்ட திமுகவினர் திரண்டு இருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபிநயா பொன்னிவளவனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரித்து சென்றனர்.

தாக்குதல்

அங்கு நின்று வாக்கு சேகரித்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தில் திமுகவை தாக்கி பேசியதால், இதில் கோபமடைந்த திமுகவினர் நாம் தமிழர் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்கு வாதம் முற்றி மோதலாக மாறியது.இதில் இரு கட்சியினரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் திமுகவினர் கீழே இருந்த கற்களை எடுத்து நாம் தமிழர் கட்சியினரை தாக்க முயன்றனர். 

இதனை கண்ட அங்கிருந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்தி இருத்தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது